திருச்சி கோவிலில் புதையல்

நேற்று 26.02.2020 திருச்சி திருவானைக்காவல்  கோவிலில்  பல லட்சம் மதிப்பிலான தங்ககாசுகள் கண்டெடுப்பு.


திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்புறம் முட்புதர் அடங்கிய பகுதி உள்ளது. இந்தப் பகுதியை நந்தவனமாக மாற்ற திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.


" alt="" aria-hidden="true" />


 இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பித்தளை கலயம் ஒன்று மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />


தகவல் அறிந்த  அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த கலயத்தை கைப்பற்றி திறந்து பார்த்தனர்.


அப்போது அதில் பழங்கால தங்க காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.


" alt="" aria-hidden="true" />


மொத்தம் 505 தங்க நாணயங்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 716 கிராம் எடை கொண்டதாகும். தற்போதைய சந்தை நிலவரப்படி இதன் மதிப்பு சுமார் 68 லட்சம் ரூபாய் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


 புதையல் கைப்பற்ற தகவல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தாசில்தாரை விரைந்து அனுப்பி தங்கப்புதையலை கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்..